கொஸ்லந்த – அலுத்வெல பிரதேசத்தில் அலுத்வெல பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஓட்டுநர் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.
ஹபுத்தளை பிரதேசத்தை சேர்ந்த நபரே இவ்வாறு நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.
அலுவலக பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்வாறு நீரில் அடித்து செல்லப்பட்டதுடன் நீரில் அடித்து செல்லப்பட்டவரின் மோட்டார் சைக்கிள் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்ட நிலையிலும் காணாமல் போனவர் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
கொஸ்லந்த பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் காணாமல் போனவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.