காலியில் இன்று வியாழக்கிழமை காலை பாறையொன்று வீட்டின் மீது விழுந்ததில் மூன்று பிள்ளைகளின் தந்தை மரணமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்
வீட்டுக்கு மேல் இருக்கும் மலையில் 15 அடி உயரத்தில் பாறையுடன் மண்சரிவு ஏற்பட்டு வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்து அதில் சிக்குண்டு குறித்த நபர் மரணமடைந்துள்ளார்.
மேலும், மரணமடைந்தவரின் குடும்பத்தைச் சேர்ந்த இன்னும் சிலர். அந்த சந்தர்ப்பத்தில் வீட்டில் இருந்துள்ளனர் எனினும், அவர்களுக்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படவில்லை.