ஜூலை 17 ஆம் தேதி டெல்லியில் பேஷன் ஷோ ஒன்றில் பங்கேற்றார் நடிகை ஜாஸ்மின், அப்போது கண்ணில் காண்டாக் லென்ஸ் போட்டபோது கண்ணில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.
நடிகர் சிம்பு நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வானம்.
இந்த படத்தில் சிம்பு, சந்தானம் அனுஷ்கா, ஜாஸ்மின் பாசின் மற்றும் பலர் நடித்திருப்பார்கள்.
இதில் சிம்புவின் பணக்கார காதலியாக நடித்தவர் தான் நடிகை ஜாஸ்மின் பாசின். எவன் டி உன்ன பெத்தான் பாடலின் மூலம் இவர் பிரபலமானார்.
மேலும் படத்தில் ராஜ் ராஜ் என்று சிம்புவை கொஞ்சல் மொழியில் கூப்பிடும் கேர்ள் பிரண்டாக நடித்திருப்பார் ஜாஸ்மின்.
வானம் படத்திற்கு பிறகு ஒரு சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தார் நடிகை ஜாஸ்மின் பாசின் . வானம் படத்திற்கு பிறகு ஒரு சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தார் நடிகை ஜாஸ்மின் பாசின் . பல ஹிந்தி டிவி ஷோக்களில் பங்கேற்றது மட்டுமின்றி தற்போது பஞ்சாபி மொழியில் படங்கள் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஜூலை 17 ஆம் தேதி டெல்லியில் பேஷன் ஷோ ஒன்றில் பங்கேற்றார் நடிகை ஜாஸ்மின், அப்போது கண்ணில் காண்டாக் லென்ஸ் போட்டபோது கண்ணில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.
அந்த நிகழ்ச்சியை தவிர்க்க முடியாது என்பதால் கண் எரிச்சலை பொறுத்துக்கொண்டு, கண்ணில் கூலிங் கிளாஸ் அணிந்தவாறு ராம்ப் வாக் செய்துள்ளார் நடிகை ஜாஸ்மின்.
போக போக கண்பார்வை முற்றிலுமாக தெரியாமல் போக, நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் உதவியுடன் மருத்துவரிடம் சென்று காண்பித்தபோது அவருக்கு Corneal Damage ஏற்பட்டுள்ளது என்று கூறி இரண்டு கண்களுக்கும் கட்டுபோட்டுள்ளனர்.
தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்களில் கண்ணாடியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த நடிகை ஜாஸ்மின் பாசின், மும்பையில் சிகிச்சையை தொடர்ந்து வருகிறேன், கண்பார்வை சரியாகி வருவதாக பதிவிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்