-மூதூர் நிருபர்-
திருகோணமலை, தோப்பூர் பிரதேச வைத்தியசாலையில் நிலவும் குறைநிறைகள் தொடர்பாக கேட்டறிவதற்காக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் இன்று புதன்கிழமை தோப்பூர் பிரதேச வைத்தியசாலைக்கு வருகைதந்தார்.
இதன்போது தோப்பூர் பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர்களிடம், வைத்தியசாலை தொடர்பான குறைபாடுகள், தேவைகள் மற்றும் ஆளணிப் பிரச்சினைகள் தொடர்பான விடயங்களை கேட்டறிந்து கொண்டார்.
குறித்த விஜயத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.