நீர்கொழும்பு – கொழும்பு பிரதான வீதியில் கஜுகம பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை பாரவூர்தியுடன் தனியார் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் வதுபிட்டிவல வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்இ 4 பேர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.