கிராமி விருது பெற்ற கொலம்பிய பாப் சூப்பர் ஸ்டார் ஷகிராவுக்கு அவரது சொந்த ஊரான கொலம்பியாவில் உள்ள மக்தலேனா நதிக்கரையில் சிலை அமைக்க நகர நிர்வாகிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த சிலை 21 அடி உயரம் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
லெபனான் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் பாரன்குவிலாவில் உள்ள லெபனான் உணவகம் ஒன்றில் மேசையின் மீது ஏறி ஷகிரா ஆடிய நடனம் அவரது இசை வாழ்க்கையில் அடையாளமாக மாறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வெண்கல சிலை அவரது நடன பாணியில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
