கிளிநொச்சி பூநகரி நெடுங்குளம் பகுதியில் நேற்றையதினம் வியாழக்கிழமை வீட்டுக்கு அருகிலிருந்த பாதுகாப்பற்ற குழியில் விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த குழந்தையின் சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.