-கிண்ணியா நிருபர்-
சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் பாலம்போட்டாறு கிராம சேவகர் பிரிவின் பத்தினிபுறம் கிராமத்தில் 17 குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.
இவர்களுக்கான உலர் உணவு பொதிகள் தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இன்று வியாழக்கிழமை பாலம்போட்டாறு சித்திவிநாயகர் வித்தியாலயத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.
இதனை திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்க தலைவரும் தமிழ் அரசுக்கட்சியின் மாவட்ட தலைவருமான சண்முகம் குகதாசன் வழங்கி வைத்தார். இதில் தம்பலகாமம் பொற்கேணி இராணுவ மேஜர் வன்னினாயக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அதிகாரி, அனர்த்த முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தர் என பலரும் கலந்து கொண்டனர்.
