மட்டு ஆறுமுகத்தான் குடியிருப்பு பிரதான வீதி பாதசாரி கடவையில் சென்ற பெண்ணொருவர், நேற்று புதன் கிழமை உயிரிழந்துள்ளார்.
ஓட்டமாவடி காவத்தமுனை பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தாயான முகைதீன் பாவா சித்தியா (வயது – 45) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பேருந்தில் தனது ஊருக்கு செல்வதற்காக பாதசாரி கடவையைக் கடக்கும் போது, வேகமாக வந்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மேலும், மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் மதுபோதையுடன் காணப்பட்டதோடு, காயங்களுடன் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.