பாணந்துறை ரயில் நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை ஏற்பட்ட மோதலில் இருவர் காயமடைந்து பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ரயில்வே ஊழியர்களுக்கும் மற்றுமொரு குழுவினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் ரயில் நிலைய அதிபர், ஊழியர் உட்பட இருவர் காயமடைந்து பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தந்தையும் மகனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மகன் பொலிஸ் பாதுகாப்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாணந்துறை சாகர மாவத்தையில் வசிக்கும் 50 வயதுடைய தந்தையும், 23 வயதான அவரது மகனுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் ரயில் பயண சீட்டு பெறுவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் அடிப்படையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.