பாதுக்கை பகுதியிலுள்ள பாடசாலையில் பேயின் நடமாட்டம் உள்ளதாக மாணவிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
பாடசாலையில் குறிப்பாக பாடசாலை விளையாட்டுக்குழு ஒன்றுடனே இந்த பேய் அதிகம் சேட்டை விடுவதாகவும் அம் மாணவிகள் மைதானத்திற்குள் சென்று விளையாடும் போது இனந்தெரியாத ஒருவர் தங்களுடன் இணைந்து விளையாடுவதை மாணவிகள் பலமுறை அவதானித்து கத்தி கூச்சலிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளரும் பலமுறை இதனை அவதானித்துள்ளதாகவும் விளையாடுபவர்களை எண்ணிக்கணக்கிடும் போது மேலதிகமாக நபர் ஒருவர் எண்ணிக்கைக்குள் உள்ளடங்குவதாகவும் தாங்கள் குழுவாக புகைப்படம் எடுக்கும் போது தங்களது குழுவில் இனந்தெரியாத நபர் இணைந்துள்ளது புகைப்படத்தை பார்க்கும் போது தெரிவந்துள்ளதாக அவர் கூறினார்.
குறித்த பயிற்றுவிப்பாளர் பாடசாலை நிருவாகத்திற்கு அறிவித்ததை தொடர்ந்து பாடசாலையில் பேய் விரட்ட பிரித் ஓத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மாணவிகளுக்கு உள ஆற்றுகை செயற்பாடுகளும் விஞ்ஞான ரீதியான விளக்கங்களுள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.