இரத்தினபுரியில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றின் மாணவர்கள் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டுகொண்டிருந்த போது மர்ம கும்பல் ஒன்றினால் இன்று செவ்வாய் கிழமை காலை தாக்கப்பட்டுள்ளனர்.
குறித்த தாக்குதல் தொடர்பில் மாணவர்கள் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் இரத்தினபுரி பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பயிற்சியில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் பழைய மாணவர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிக்கொள்ளும் குழுவினர் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான விளையாட்டு பயிற்றுவிப்பாளர் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில் இரத்தனபுரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக கூறப்படுகிறது.