பாடசாலை மாணவர்களுக்கு கை கழுவும் சுகாதார விழிப்புணர்வு

 

-கிண்ணியா நிருபர்-

மாணவர்களிடையே சமீப காலமாக சுகாதாரக் குறைபாடுகள் அதிகரித்து வருவதன் காரணமாக, அவர்கள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகும் அபாய நிலை காணப்படுகின்றது.

இதனை கருத்தில் கொண்டு, மாணவர்களுக்கான தனிப்பட்ட சுகாதாரத்தை எவ்வாறு பேணுவது, நோய்களைத் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் சுகாதார முறைப்படி கைகளை சரியான முறையில் கழுவுவது தொடர்பான பயிற்சி நிகழ்வு இன்று திங்கட்கிழமை, மூதூர் கஜமுகா வித்யாலயத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வு முஸ்லிம் எய்ட் (Muslim Aid) நிறுவனத்தின் ஏற்பாட்டில், மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி நூர் முகம்மது கஸ்ஸாலி தலைமையிலும் வழிகாட்டலிலும் இடம்பெற்றது.