எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19ஆம் திகதிக்கு முன்னதாகவே பாடசாலை மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் பாடசாலை சீருடைகள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மேலும், 80 சதவீதமான பாடப்புத்தகங்கள் ஏற்கனவே அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.