புதிய கல்வி தவணை ஆரம்பிக்கும் முன்னர் பாடசாலை பாடப்புத்தக விநியோகம் நிறைவடையும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதுவரையில் 80% அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.