இரத்தினபுரி நகரின் பிரதான பேருந்து நிலைய கட்டிடம் ஒன்றில் சூதாட்டத்தில் ஈடுபட்ட பாடசாலை மாணவர்கள் 6 பேரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த ஆறு பேரும் பாடசாலைக்கு செல்லும் வழியில் சீருடைகளைக் கழற்றி வைத்து விட்டு வேறு உடைகளை மாற்றிக் கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அடிக்கடி இவ்வாறு இவர்கள் சூதாடுவதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
மாணவர்களின் நடவடிக்கைகள் குறித்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.