தரமற்ற பாடசாலை உபகரணங்களை பயன்படுத்துவதன் மூலம் சிறுவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாக கொழும்பு ரிஜிவே ஆர்ய சிறுவர் வைத்தியசாலையின் நிலைமை கட்டுப்பாட்டு பிரிவின் தலைவர் டாக்டர் மஹிந்த விக்கிரமாராச்சி தெரிவித்துள்ளார்.
உடலுக்குள் உலோகம் நுழைவதால் புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்கள் வரும் அபாயம் இருப்பதாகவும் இறக்குமதி செய்யப்பட்ட தரம் குறைந்த பென்சில்கள், வண்ண பென்சில்கள், பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்கள் மற்றும் மதிய உணவுப் பெட்டிகள் தொடர்பில் விசாரணையின் போது இவை தெரியவந்துள்ளதாக விக்கிரமாராச்சி மேலும் தெரிவித்தார்.