கம்பளை பிரதேசத்தில் மாவத்துரை கலைமஹால் தமிழ் கல்லூரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று மாணவர்கள் காயமைடைந்து கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை நேரத்தில் இந்த மூன்று மாணவர்களும் பந்து போன்ற ஒன்றை பார்த்து மாணவர் ஒருவர் அதை உதைத்த போது குறித்த மர்மப்பொருள் வெடித்து சிதறி மாணவனின் காலணி உடைந்து காலில் காயம் ஏற்பட்டது.
இந்நிலையில் வெடிப்பு எதனால் ஏற்பட்டது என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.