வவுனியா தாண்டிக்குளம், பிரமண்டு வித்தியாலயத்தில் பல இலட்சம் பெறுமதியான தொலைக்காட்சி திருடப்பட்டமை தொடர்பில் நேற்றையதினம் சனிக்கிழமை பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டிருந்தனர்.
முறைபாட்டின் அடிப்படையில் பாடசாலைக்கு இன்று ஞாயிற்று கிழமை காலை விரைந்த வவுனியா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், பாடசாலைக்கு அருகேயுள்ள வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசீரீவி காணொளிகளையும் பரிசோதனைக்குட்படுத்தினர்.
இதன்போது, கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் 15 வயது மதிக்கத்தக சிறுவன் ஒருவன் தொலைக்காட்சியினை தூக்கிக்செல்வது சிசீரீவியில் பதிவாகியுள்ளது.
சிசீரீவி காட்சியின் உதவியுடன் சிறுவனை கண்டுபிடிப்பதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன், பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை பாதுகாவலர்கள் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.