-பதுளை நிருபர்-
பசறை வலய கல்வி பணிமனைக்கு உட்பட்ட புஹுல்வத்தை சிங்கள வித்தியாலயத்தில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்கலம் நேற்று புதன் கிழமை மாலை எரிந்து சேதமடைந்துள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.
பாடசாலையில் சூரிய மின்கலம் பொருத்தப்பட்டுள்ள பகுதியில் நேற்று மாலை தீப்பிடித்து எரிவதை அவதானித்த நபர் ஒருவர் பாடசாலையின் அதிபருக்கு அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து. பாடசாலைக்கு விரைந்த அதிபர் அயலவர்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக அதிபர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பாக பசறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பசறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

