மொனராகலை வெதிகும்பர பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கல்விப்பயிலும் அதே பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று காதல் ஜோடிகள் சூக்கிரி எல்லையை கடந்த 12ஆம் திகதி பார்வையிடுவதற்குச் சென்ற போது அவர்களுள் இரண்டு காதலிகள் கடும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் மற்றைய காதலி துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்று மொனராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த மாணவிகளின் காதலர்கள் மூவரும் 17 வயதுக்கு உட்பட்டவர்களாவர்.
பாடசாலைக்குச் செல்வதாக வீடுகளில் சொல்லிவிட்டு இவர்கள் காதலர்களுடன் சென்றுள்ளனர். எனினும், பாடசாலைக்கு சமூகமளிக்கவில்லை என கிடைத்த தகவல்களின் பிரகாரம் தேடிபார்த்தபோது அந்த மூவரும் மோட்டார் சைக்கிள்களில் சென்றமை கண்டுப்பிடிக்கப்பட்டது.
பின்னர் இரண்டரை மணியளவில் மூன்று மாணவிகளும் தத்தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதுதொடர்பில் விசாரித்த போதே மேற்படி அவர்கள் துஷ்பிரயோகத்திற்குள்ளானமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் மாணவி ஒருவரின் தந்தை செய்த முறைப்பாட்டின் பிரகாரம், 6 பேரும் கைது செய்யப்பட்டு மாணவிகள் மூவரும் வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளன.
காதலர்கள் மூவரையும் மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.