அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கான 2023 ம் ஆண்டின் 3ம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் திகதியை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, 2023 ம் ஆண்டின் 3ம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் 2024 பெப்ரவரி 05 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
2023 ம் ஆண்டின் 3ம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி 01 ஆம் திகதி ஆரம்பிக்க கல்வி அமைச்சு முதலில் தீர்மானித்திருந்தது.
எவ்வாறாயினும், தற்போது நடைபெற்று வரும் 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் விவசாய பாட முதலாம் மற்றும் இரண்டாம் வினாத்தாள்களை 2024 பெப்ரவரி 01 ஆம் திகதி மீள் நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் எடுத்த தீர்மானத்தின் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.
2023ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாய பாட முதலாம் மற்றும் இரண்டாம் வினாத்தாள்கள் முன்னரே வெளியான சர்ச்சையால் மீண்டும் பெப்ரவரி 1 ஆம் திகதி நடத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.