2023 ஆம் கல்வி ஆண்டின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக அரச பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் திகதிகளை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலமான அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகள் எதிர்வரும் பெப்ரவரி 01 வியாழன் அன்று ஆரம்பிக்கப்படும்.
அத்துடன் அரசு மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் முஸ்லிம் பாடசாலைகள் எதிர்வரும் ஜனவரி 11 வியாழன் அன்று ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.