மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் மூன்று மாணவர்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி பாக்குநீரிணையை நீந்திக் கடந்து மீண்டுமொருமுறை சாதனையை படைக்கவுள்ளதாக கல்லூரியின் அதிபர் தெரிவித்துள்ளார்.
புனித மிக்கேல் கல்லூரியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட போதே கல்லூரியின் அதிபர் அன்ரன் பெனடிக் ஜோசப் இவ்வாறு தெரிவித்தார்.
புளோரிங்டன் டயன்ஸ்ரித், புளோரிங்டன் டயன் பிறிடோ, இருதயநாதன் கெல்வின் கிசோ என்கிற 3 மாணவர்களே இந்தியாவின் தனுஸ்கோடியிலிருந்து பாக்குநீரிணையைக் நீந்தி இலங்கையின் தலைமன்னாரை வந்தடைந்து சாதனை நிலைநாட்டவுள்ளனர்.
புனித மிக்கேல் கல்லூரியின் 150 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடலில் பிளாஸ்டிக் பொருட்கள் கலப்பதை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவே இந்த மாணவர்கள் இவ்வாறு பாக்குநீரிணையை கடக்கவுள்ளனர்.