ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்ற சலுகையில் பழுதடைந்த கோழி இறைச்சி விற்பனை செய்யப்படுவதாக வந்த முறைப்பாட்டையடுத்து கே.எஃப்.சி இராஜகிரிய விற்பனை நிலையத்தில் பொது சுகாதார பரிசோதகர்களால் அங்கிருந்த கோழி இறைச்சிகள் அழிக்கப்பட்டுள்ளன.
டெய்லி மிரருக்குப் பேட்டியளித்த குறித்த பகுதிக்கான பொது சுகாதார பரிசோதகர் தரிந்து, தாங்கள் உட்கொள்ளும் கே.எஃப்.சி கோழியிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து முறைப்பாடு வந்ததாகக் கூறினார்.
“இதையடுத்து, விற்பனை நிலையத்திற்கு விரைந்து சென்று பழுதடைந்ததாக நம்பப்படும் கோழி இறைச்சியை அப்புறப்படுத்தினர்,” என்று அவர் கூறினார்.
எவ்வாறாயினும்இ மேலதிக விசாரணைகளுக்காக கோழியின் மாதிரி மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் மாதிரியின் முடிவுகளை வெளியிட குறைந்தது 10 நாட்கள் ஆகலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.