இந்தியாவில் மத்திய பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த இளைஞர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் மதுபோதையில் இருந்த ஆதிக்க சமூகத்தைச் சேர்ந்த பாஜக இளைஞரணியை சேர்ந்த பிரவேஷ் சுக்லா பழங்குடியின இளைஞர் முகத்தில் சிறுநீர் கழித்தார். இந்த காணொளி கடும் கண்டனங்களுடன் சமூக வலைதளங்களில் பரவியது.
இதனை தொடர்ந்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், பரவேஷ் சுக்லாவை கைது செய்த காவல்துறையினர் தேசிய பாதுகாப்பு சட்டம், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.