கஹவத்தை – ஹுனுவல – அல்லின்ன – பொல்வத்தஹேன பிரதேசத்தில் நேற்று புதன் கிழமை இரவு 70 அடி பள்ளத்தில் பாரவூர்தி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோழிகளுக்கு உணவு ஏற்றி சென்ற பாரவூர்தியே இவ்வாறு விபத்துக்குள்ளானதுடன் காயமடைந்தவர்கள் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை ஓப்பநாயக்க காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.