யால வன பகுதியில் நேற்று முன் தினம் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 6 கோடி மதிப்புள்ள கஞ்சா மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யால வனப்பகுதியில் 8 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள சுஹந்திரமாறு பகுதியில் 4 ½ ஏக்கர் காணியில் கஞ்சா விவசாயம் செய்யப்பட்டு விற்பனைக்கு தயார்படுத்தப்பட்டிருந்த நிலையிலேயே சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது விற்பனைக்கு தயாராக இருந்த 1,570 கிலோ கஞ்சா மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.