யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் நேற்று சனி கிழமை அதிகாலை இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த வீடு ஒன்றின் மீது இரண்டு மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடியவாறு வந்த நால்வர் தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
குறித்த தாக்குதலின் போது வீட்டின் தளபாடங்கள் மற்றும் ஜன்னல்கள் சேதமாக்கியுள்ளதுடன்இ தங்கி இருந்த மாணவர் ஒருவருக்கு சிறு காயம் ஏற்பட்டது.
இது தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.