பேராதனை – கண்டி வீதியூடாக பேராதனை விடுதிக்கு முன்பாக பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடக தணிக்கை சட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல விடயங்களை வலியுறுத்தியும் வாழ்க்கைச் சுமைக்கு ஏற்ப மஹாபொல உதவித் தொகையை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என கோரியும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.