அமெரிக்காவின் – பிராங்க்ஸ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு ஒன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
பார்மொடன் – ஹைட்ஸ் பகுதியில் உள்ள டேவிட்சன் அவென்யூவில் நேற்று வெள்ளிக்கிழமை காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
36 வயதுடைய ஆணொருவரும் 44 வயதுடைய பெண்ணொருவரும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த இருவர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்