நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) அறிவித்துள்ளது.
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் மீள ஆரம்பிக்கப்படும், என அதன் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் இயல்பு நிலை காரணமாக இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக பேராசிரியர் சம்பத் அமரதுங்க மேலும் தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக மாணவர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்களின் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டதன் காரணமாக பல்கலைக்கழகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.