திருக்கோவில் சாகாமம் குடிநிலம் பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
திருக்கோவில் குடிநிலம் பகுதியை சேர்ந்த தர்மராசா நிதர்ஷன் (வயது – 21) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.
சாகாமம் குடிநிலம் பகுதில் மோட்டார் சைக்கிள் ஒன்று பலத்த காற்றினால் வேகக்கட்டுபாட்டை இழந்து வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துபற்றிய மேலதிக விசாரணையை திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.