பதவியா பகுதியில் உள்ள பலசரக்கு கடையொன்றினுள் மறைத்து வைத்து விற்கப்பட்ட கஞ்சா பொதியொன்று யாழ்ப்பாணத்தில் உள்ள 51 ஆவது இராணுவ தலைமையக புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடுத்து மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 4.5 கிலோகிராமுடைய கஞ்சா பொதி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பதவியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.










