கிரான் திகிலிவெட்டை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 5 புலமைப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டி கருத்தரங்கு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
இலங்கை பாதுகாப்புப் படையணி கிழக்கு கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன குணரத்னtpன் வழிகாட்டலில் 2023இல் 5 ஆம் தர புலமைப் பரீட்சையில் தோற்றவுள்ள 18 பாடசாலைகளை உள்ளடக்கிய 119 மாணவர்களுக்கு இந்த கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
ஒரு வளமான நாட்டின் எதிர்கால குழந்தைகளுக்கு அவர்களின் அறிவு திறமை மற்றும் அணுகு முறைகளை வளர்ப்பதன் மூலம் நல்லதொரு நாட்டினை கட்டியெழுப்புவதே இதன் நோக்கமாகும்.
இன்றைய நிகழ்வில் சிவில் சமூக செயற்பாட்டு அதிகாரி லெப்ரினட் கேணல் வி.எம்.இந்துனில் பாலசூர்யா, 12 ஆவது இலங்கை தேசிய படைப் பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் சந்தன வன்னிநாயக்க,திகிலிவெட்டை பாடசாலை அதிபர் ஏ.பாலமுரளிதன்,ஆசிரிய ஆலோசகர்கள் திருமதி கனகரெத்தினம்,மற்றும் திருமதி அருளேந்திரன் ஆகியோர்கள் பங்குபற்றியிருந்தனர்.