சீதுவை, தடுகம் ஓயாவுக்கு அருகில் சீதுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய கைவிடப்பட்டிருந்த நிலையில் இருந்த பயண பொதியிலிருந்து சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த சடலம் ஆணொருவருடையதாக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் கொலை செய்யப்பட்டுள்ள நபரின் அடையாளமோ அல்லது இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் தொடர்பிலோ இதுவரையில் எந்த தகவலும் கிடைக்கவில்லை என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசேட பொலிஸ் குழுக்கள் நேற்று வெள்ளிக்கிழமை இரவிலிருந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்