பெலியத்தவில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த கடுகதி ரயிலின் இயந்திரத்தில் இன்று திங்கட்கிழமை மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
எந்தேரமுல்ல ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும், இயந்திரக் கோளாறு காரணமாகவே ரயிலின் இயந்திரத்தில் தீப்பிடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.