புகையிரதத்தில் பயணிக்கும் பயணிகளில் சுமார் 25% பேர் பயணச்சீட்டு இன்றி பயணிப்பதால் புகையிரத திணைக்களத்திற்கு 3 பில்லியன் ரூபா வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளது என திணைக்களத்தின் பொது முகாமையாளராக எச்.எம்.கே.டபிள்யூ.பண்டார தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.