இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாதிகளை வழிநடத்தியதாக சந்தேகிக்கப்படும் புஷ்பராஜ் ஜெரார்ட் என்பவர் கொழும்பில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.