-பதுளை நிருபர்-
பதுளை மட்டக்களப்பு வீதியின் லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அரவாகும்புற பகுதியில் பாரிய மண்மேடு சரிந்து வீதியில் வீழ்ந்துள்ளமையால் குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.
மண்ணை அகற்றும் பணிகளை பொலிஸாரும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஊழியர்களும் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.