-பதுளை நிருபர்-
பதுளையில் இருந்து ரந்தெனிகல ஊடாக கண்டி செல்லும் பிரதான வீதியில் – கீர்த்திபண்டாரபுர பகுதியில பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததில் அவ்வீதி ஊடான போக்குவரத்து தடைபட்டுள்ளது.
மரத்தை அகற்றி, போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கையை அதிகாரிகளும், பொலிஸாரும், மக்களும் முன்னெடுத்துவருகின்றனர்.
பதுளை மாவட்டத்தில் பல பகுதிகளிலும் கடும் மழையுடன்கூடிய வானிலை கடந்த சில நாட்களாக நிலவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.