-பதுளை நிருபர்-
பதுளை பசறை பிரதான வீதியில் 6ஆம் கட்டை பகுதியில் வீதியில் இன்று செவ்வாய் கிழமை காலை பாரிய மண்மேடு சரிந்து விழுந்தமையினால் குறித்த வீதியின் ஊடாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த மண்மேட்டை அகற்றி வீதியை சரிசெய்யும் நடவடிக்கையில் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் ஈடுபட்டு இரண்டரை மணித்தியாலங்களின் பின்னர் குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் கடந்த சில தினங்களாக பதுளை மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக பசறையில் இருந்து எக்கிரிய செல்லும் பிரதான வீதியில் மெட்டிக்காத்தன்ன 33 ஆவது மைல் கல்லுக்கு அருகே வீதி தாழிறங்கியமையினால் குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து மெட்டிக்காத்தன்ன வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
6ஆம் கட்டை பகுதியில் இன்று செவ்வாய் கிழமை காலை பாரிய மண்மேடு சரிந்து விழுந்தமையினால் குறித்த வீதியின் ஊடாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.