பதுளை மாவட்டத்தின் பிரதான வீதிகளில் மண்சரிவு மற்றும் மரங்கள் முறிந்து வீழ்த்தமையினால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளதாக பதுளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் பதுளை – தல்தென வீதியிலுள்ள வீட்டொன்று சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த வீதிகளை பயன்படுத்தும் சாரதிகள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.