கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை ELLA WEEK END EXPRESS என்ற புதிய சொகுசு ரயிலை சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் இந்த ரயில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது .
சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு இந்த ரயில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
350 ஆசனங்களைக் கொண்ட இந்த ரயில் சனிக்கிழமைதோறும் அதிகாலை 5.30 இற்கு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கிப் புறப்படவுள்ளது. .
இதேநேரம் ஞாயிற்றுக்கிழமை இரவு 09 மணிக்கு பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.