கொழும்பு முகத்துவாரம் பகுதியில் களஞ்சியசாலை ஒன்றில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் பதுக்கி வைத்திருந்த பாவனைக்கு உதவாத பாரியளவான உணவுப் பொருட்களை நுகர்வோர் விவகார அதிகார சபையினர் மீட்டுள்ளனர்.
இதன் போது 35 கிலோ கிராம் சீனி, 15,000 கிலோ கிராம் சவ்வரிசி என்பன மீட்கப்பட்டுள்ளதுடன் அவற்றின் காலாவதி திகதி மாற்றப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.