பதில் பொலிஸ் மா அதிபராக மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியினால் இன்று புதன்கிழமை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் தற்போதைய பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன ஓய்வு பெற இருந்த போதிலும், அவர் அரசாங்கத்திடமிருந்து நீடிப்பு பெற்றிருந்தார்.
எனினும், பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன தனது பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக அண்மையில் அரசாங்கத்திற்கு அறிவித்தார், தற்போதைய நீடிப்பு முடிவடைந்துள்ளதாக பொலிஸ் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்