
பதினெட்டு வயது மனைவி அடித்துக் கொலை?
குருநாகல் பிரதேசத்தில் 18 வயதுடைய திருமணமான யுவதியொருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார்.
கிரிமெட்டிய கெலினாவல பிரதேசத்தில் வசித்து வந்த செனுரி பிரேமதிலக (வயது – 18) என்ற யுவதி இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
செனுரியின் கணவரின் தாக்குதலே அவரது மரணத்திற்குக் காரணம் என்று உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனடிப்படையில், மரணத்தில் சந்தேகம் நிலவுவதாகவும் செனுரியின் கணவரை கைது செய்யுமாறு பொலிஸாரை வலியுறுத்தியும் அவரின் உறவினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் நேற்று புதன் கிழமை கிரிமெட்டிய வீதியில் சடலத்தை வீதியில் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் குறித்த பகுதியில் பதற்றம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
