எதிர்வரும் பண்டிகை காலத்தை நாளை வெள்ளிக்கிழமை முதல் முன்னிட்டு விசேட பேருந்து மற்றும் தொடருந்து சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது.
கிறிஸ்மஸ் மற்றும் பாடசாலை விடுமுறை நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்களுக்காக விசேட பேருந்து மற்றும் தொடருந்து சேவைகள் முன்னெடுக்கப்பட்வுள்ளதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாளை முதல் நீண்ட தூர சேவைகளுக்காக 100 மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபை கூறியுள்ளது.