சேவைக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது மின்சார சபையின் வழிகாட்டல்களை பின்பற்ற தவறும் பணியாளர்களை பணியிலிருந்து இடைநிறுத்துமாறு மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவுறுத்தியுள்ளார்.
இந்தவிடயம் தொடர்பாக இலங்கை மின்சார சபையின் முகாமைத்துவத்துக்கு அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், அவ்வாறு பணியில் இருந்து இடைநிறுத்தப்படும் பணியாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் ஆலோசனை வழங்கியுள்ளதாக மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.