பிலியந்தலை மாவித்தபுரவில் வீடு ஒன்றில் இயங்கிய சட்டவிரோத பட்டாசு உற்பத்தி நிலையத்தில் இன்று ஞாயிற்று கிழமை காலை காலை 7 மணியளவில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் நிலைய உரிமையாளர் மற்றும் அவரது இரு பிள்ளைகள் தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
பண்டிகைகளை முன்னிட்டு இன்று காலை பட்டாசுகளை சந்தைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை இவர்கள் முன்னெடுத்தபோதே இந்த வெடிப்பு ஏற்றட்டுள்ளது. இதன்போது காயமடைந்தவர்கள் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் வீட்டிலிருந்த மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட தளபாடங்கள் மற்றும் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.